ஞாயிறு, 26 ஜூன், 2011

மதவாதி vs பகுத்தறிவுவாதி


மதவாதி: ஐயா! வெயில் காலத்துல கருப்புச் சட்டை போட்டிருக்கிறீர்களே?

பகுத்தறிவுவாதி: ஆமாங்கய்யா! நான் ஒரு பகுத்தறிவுவாதி!

மதவாதிBLACKBODY RADIATION தெரியும்தானே?கருப்பு நிறம் வெப்பத்தைத் தக்கவைக்கும் பண்புடையது. வெயில்காலத்தில் கருப்புச்சட்டை உடம்புக்கு நல்லதல்ல என்று உங்கள் பகுத்தறிவிற்குத் தெரியாதா?
************
மதவாதி:ஐயா நீங்க சாமி கும்பிடமாட்டீங்களா?
பகுத்தறிவுவாதி: ஆமா! பகுத்தறிவுவாதிகள் சிலை வணங்கமாட்டோம்!
மதவாதி: அப்ப ஏனுங்கய்யா பெரியார் சிலைக்கும் மாலைபோட்டு பிறந்த/இறந்த தினத்தன்று கும்பிடுறீங்க?
*************
மதவாதி: ஐயா! கடவுளை ஏன் நம்பமாட்டீர்கள்?
பகுத்தறிவுவாதி: கடவுளை யாருமே கண்டதில்லையே ஐயா!
மதவாதி: பகுத்தறிவைக்கூடத்தான் யாரும் கண்டதில்லை! அதுக்காக உங்களுக்கு அறிவில்லை என்று சொல்ல முடியுமா?
பகுத்தறிவுவாதி: ?!
**************
மதவாதி: ஐயா நீங்கள் எப்படி உங்களைப் பகுத்தறிவுவாதி என்று சொல்கிறீர்கள்?
பகுத்தறிவுவாதி: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று பகுத்தறிந்துள்ளோம் என்பதால் நான் பகுத்தறிவுவாதிதான்!
மதவாதி: ஓஹோ! கடைசியாக என்ன பகுத்தறிந்து முடிவுக்கு வந்தீர்கள்?
பகுத்தறிவுவாதி:கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்!
மதவாதி: ஏன் அப்படி ஒரு முடிவுகு வந்தீர்கள்?
பகுத்தறிவுவாதி: ஏனென்றால் அவரை யாருமே கண்டதில்லை!
மதவாதி: எவரை யாருமே கண்டதில்லை?
பகுத்தறிவுவாதி: அதான் சொன்னேனே. கடவுளை யாருமே கண்டதில்லை என்று!
மதவாதி: இல்லாத ஒன்றை எப்படிக் காணமுடியும்?
பகுத்தறிவுவாதி: அப்ப நீங்களும் கடவுள் இல்லை என்று ஒப்புக் கொள்கிறீர்களா?
மதவாதி: இல்லை என்று 100% நிரூபனமாகும்வரை அப்படி ஒத்துக் கொள்ள மாட்டேன்!
பகுத்தறிவுவாதி: ஏன்?
மதவாதி: 100% நிரூபனமாகததை நம்புவதற்கு என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை!
பகுத்தறிவுவாதி: அப்ப நீங்களும் பகுத்தறிவுவாதியா?
மதவாதி: ஆமாம்! என் பகுத்தறிவுக்கு எட்டாததையும் நம்புகிறேன். 
பகுத்தறிவுவாதி: அப்படியென்றால் நாங்கள்?
மதவாதி: உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதை மட்டும் நம்புவதால் அரைகுறை பகுத்தறிவுவாதி என்று சொல்லலாம்! 
பகுத்தறிவுவாதி: அப்ப முழு பகுத்தறிவுவாதியாக மாற என்ன செய்ய வேண்டும்?
மதவாதி: பகுத்து அறிந்து சரியானக் கடவுளை நம்புங்க...

திங்கள், 20 ஜூன், 2011

இடிச்ச புளி இத்தியாசி

எச்சரிக்கை/ Warning: இப் பதிவின் நோக்கம் யார் மனதையும் நோகடிப்பதல்ல. பதிவு பிடிக்காதவர்கள் இந்த அறிமுகத்தைப் படித்து விட்டு, எஸ்கேப் ஆகலாம். இவ் அறிமுகத்தின் கீழே அபாயக் குறியீடுகள், சிகப்புக் கோடுகள் உள்ளன. மனதில் தைரியம்- தெம்பு உள்ளவர்கள், சாதிக்க விரும்பும் அன்பர்கள், எல்லோரும் இந்தச் சிகப்புக் கோட்டினைத் தாண்டி வரலாம். பதிவில் உள்ள கருத்துக்கள் நேரடியாக உங்களில் யாரையாவது தாக்குகிறது, பதிவில் உள்ள கருத்துக்கள் எனக்கே குத்தலாக உள் குத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்று பஞ்சாயத்துப் பண்ண சால்வையைத் தோளில் போடுற ப்ளாண் உங்களில் யாருக்காச்சும் இருந்தா; இப்பவே எஸ் ஆகிடுங்க. சிகப்புக் கோட்டைத் தாண்டி வந்தீங்க- ரொம்ப சீரியஸ் ஆகிடுவீங்க! இனிப் பதிவிற்குள் போவோமா.
டிஸ்கி: சிகப்புக் கோடு உபயம்: ஓட்ட வடை நாராயணன்) 


குறுக்கு வழியில் பிரபல பதிவராக அருமையான டிப்ஸ்!
பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே,
வலைப் பதிவு எனப்படுவது, இன்றைய கால கட்டத்தில் தணிக்கைகள் ஏதுமற்ற ஒரு சுயாதீன ஊடகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எமக்குப் பிடித்தவற்றை, எங்களின் எண்ணங்களை வலையில் எழுதி உலகெங்கும் கொண்டு செல்வதற்கு கூகிள் அம்மம்மா இலவசமாக வழங்கும் ஓர் ஊடகம் தான் ப்ளாக்.


நானும் இவ்ளோ நாளா face book & orkut 
உறுப்பினர் ஆகி  உள்ளன், கூட்டமே இல்லையே என்று கவலை உணர்வு மேலோங்க, என் பதிவுகளை எப்படிப் பிரபலமாக்கலாம் எனும் நோக்கில்,

பதிவரும், என் நண்பருமான இடிச்ச புளி இத்தியாசி அவர்களிடம் என் சந்தேககங்களைக் கேட்கத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் நகைச்சுவை போட்டோவோடு ப்ளாக் தொடங்கிய இடிச்ச புளி அவர்கள், திடீரெனத் தனது போட்டோவையும், மாற்றி விட்டு இப்போது வேறோர் வடிவில் ப்ளாக்கில் முதிர்ந்த தோற்றத்தோடு வலம் வருகிறார்( இந்தப் போட்டோ மாற்றத்திற்கான காரணம் இடிச்ச புளியின் பேட்டியுடன் வெளியான அவரது போட்டோவும்,
அவரது ப்ளாக்கில் இருந்த போட்டோவும் வித்தியாசமின்றி இருக்கே எனப் பதிவர்கள் பலர் கிண்டல் பண்ணியது தானாம்.)

ஓக்கே மேட்டருக்குப் போவேமா. இப் பதிவில் உள்ள விடயங்கள் அனைத்தும் பதிவர் இடிச்ச புளி எனக்கு அருளிய விடயங்களே. ஆகவே பதிவினைப் படித்து விட்டு என் மீது கோபங் கொள்வது முறையல்ல. எதுவாக இருப்பினும் பதிவர் இடிச்ச புளி இத்தியாசியிடம் நீங்களே டீல் பண்ணிக்குங்க.

________________________________________________________________________

ப்ளாக் எழுதுவோரைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம்.
*ஆத்ம திருப்திக்காக எழுதுவோர் அல்லது அலுவலக வேலைச் சுமையில் கொஞ்சம் ஆறுதல் வேண்டி ப்ளாக் எழுதுவோர், இவர்கள் தான் இன்று ப்ளாக் எழுதுவோர்களில் முதலாமிடத்தில் இருக்கிறார்கள்.

*மற்றையோர் தாம் என்ன எழுதினாலும் சரி, தமக்கு ஓட்டும், பின்னூட்டங்களும் வந்து பிரபலமாகினால் போதும் எனும் நோக்கில் பதிவெழுதுவோர்.

*எப்போதாவது கிடைக்கும் தமது ஓய்வு நேரத்தில் ஒரு பகுதியினைப் பயன்படுத்தி தம் படைப்புக்களைப் பகிரும் இலக்கியவாதிகள்.

*பிறரை வசை பாடும் நோக்கில் ப்ளாக் எழுதும் நபர்கள்.
ரொம்ப முக்கியம் இப்போ..
"அண்ணாச்சி, சௌக்கியமா இருக்கியளா?"

"என்னடே! நீ எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன் அண்ணாச்சி உங்க புண்ணீயத்துல"

"என்ன செய்யச் சொல்லுதிய அண்ணாச்சி? நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மம்லா?!"

"எலே! என்ன இதுக்கே இப்படி அலுத்துக்கிடுத? உலகத்துல உன்னை விட பாவப்பட்டவன் எத்தனை பேரு இருக்கான்னு யோசிச்சுப் பாருடே!அப்ப நீ எவ்வளவு பெரிய அதிர்ஷ்ட சாலின்னு உனக்கே தெரியும்?"

"என்னத்த அண்ணாச்சி சொல்லுதிய?"

"எலே! நீ தமிழ்ப் பதிவெல்லாம் படிக்கியா?"

"என்னத்துக்கு? நான் கொஞ்சம் நல்லா இருக்கது கூட உங்களுக்குப் புடிக்கலையாக்கும்? எதுக்கு இப்ப அதப் பத்திக் கேக்கிய?"

"ஏன் கேக்கம்னா, அங்குன நம்மூருகாரப் பய ஒருத்தன் 
நான்கு வருஷமா எழுதுதாண்டே! என்னத்த எழுதுதோம்னே தெரியாம ஒருத்தன் நான்கு வருஷமா எழுதுததைப் படிக்குறவங்களப் பத்தி யோசிச்சுப் பாருல மக்கா! அப்ப தெரியும் உன்னை விட பாவப்பட்ட ஜென்மங்களும் இருக்குன்னு"
அடக் கடவுளே? யாரு அண்ணாச்சி அந்தக் கொடுமைக்கார பய?"

"அதாம்டே நம்ம சாத்தான்குளத்துக்காரப் பய இருக்காம்லாடே! ஊரு பேரைக் கெடுக்குததுக்குன்னே எழுதிக்கிட்டு கெடக்கான் பாத்துக்க. அவங்கப்பா அம்மா மேல என்ன கோவமோ தெரியல...
"'பேரு சொல்லுத புள்ளையா இல்லாம போனாலும் பேரைக் கெடுக்காத தொல்லையாவது இருந்து தொலைடே!ன்னு அவன் கிட்ட சொல்ல வேண்டியதுதானே?"

"அங்கதாம்ல மக்கா பிரச்னையே இருக்கு?"

"என்ன பிரச்னை.அவன் ஒரு முடிவெடுத்துட்டா அவன் பேச்சை அவனே கேக்க மாட்டானாம்ல"

"அப்படின்னா "இனிமே தொடர்ந்து பதிவை எழுதுறேண்டே!"ன்னு முடிவெடுக்கச் சொல்லுங்க. அப்படியாவது அவன் பேச்சை அவனே கேட்காம எழுதாம இருக்கானான்னு பார்க்கலாம்"
"எனக்கும் ஆசைதான். ஆனா, ஆசைப்பட்டதெல்லாம் நடக்கவா போவுது?"





எனக்கு உழைக்கும் நோக்கம் உள்ளதால் அதிக காலம் இதில்  என் காலத்தை
வீணாக்க விரும்பவில்லை இதை இடிச்ச புளி இத்தியாசி தவறாக புரிந்து கொண்டு ஆங்கிலம் தெரியாது  இந்தி தெரியாது என்று  உளறிகிறான் தில் இருந்தால் சபையில பேசிபாரு..........


குரங்கு கைல

விரைவில் நிறைய நிறைய உண்மைகள்.....